#BREAKING : அதிக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர் மீது நடவடிக்கை..சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு.!

Default Image

டிக்கெட் கட்டணம் அதிகமாக வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கம் 3 , பைரவா ஆகிய படங்கள் பண்டிகை நாட்களில் வெளியானது என்பதால் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் அதிகமாக வசூலலிப்பதாக தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக அரசு மற்றும் காவல் துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு இன்று நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது இவ்வளவு தொடர்பாக தமிழக அரசு தரப்பில் இருந்து வந்த அறிக்கையில், திரையரங்குகளில் அதிகம் கட்டணம் வசூல் செய்வது தொடர்பாக புகார் வந்ததாகவும், அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது, வழக்கமான டிக்கெட் கட்டணத்தை விட  100 ரூபாய் வசூல் செய்ததாகவும், பிறகு இதில் சம்பந்தப்பட்ட திரையரங்குகளிடம் தலா 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டதாகவும், இதனை  தடுப்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து, நீதிபதி அனிதா சுமந்த்  அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்