தமிழகத்தில் அதிரடி திட்டங்கள்., பிரதமர் எந்தெந்த திட்டங்களை திறந்து வைத்தார் தெரியுமா.?

Published by
பாலா கலியமூர்த்தி

கோவை மொடிசியா அரங்கில் அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

தமிழகத்தில் புதிய திட்டங்களை தொடங்கி வைக்க இன்று கோவை வந்த பிரதமர் மோடி, கோவை கொடிசியா அரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று, ரூ.12,400 கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைத்தார். இவ்விழாவில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பங்கேற்றனர். திட்டங்களை திறந்த வைத்த பின் பேசிய பிரதமர், சுற்றுச் சூழலை பாதிக்காத தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும் என தெரிவித்திருந்தார்.

  • பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ரூ.330 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய குடியிருப்புகளை திறந்து வைத்தார்.
  • நெய்வேலியில் ரூ.8,000 கோடி செலவில் உருவாக்கப்பட்ட என்.எல்.சியின் 2 புதிய அனல் மின் நிலையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
  • தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார்  துறைமுகத்தில் 8 வழிச்சாலை கோரம்பள்ளம் பாலம் மற்றும் ரயில்வே பாலம் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
  • கீழ் பவானி திட்டத்தை விரிவுபடுத்துதல், புதுப்பித்தல் மற்றும் நவீனமாக்கல் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
  • ரூ.107 கோடி செலவில் 9 ஸ்மார்ட் சிட்டி நகரங்களில் ஒருங்கிணைந்த ஸ்மார்ட் சிட்டி கட்டுப்பாட்டு மையத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
  • தென் மாவட்டங்களில் 709 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி! 

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

18 hours ago

திருப்பதி கோயிலில் முட்டி போட்டு நேர்த்திக் கடன் செலுத்திய நிதிஷ் ரெட்டி!

திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…

18 hours ago

ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? அமைச்சர் மூர்த்தி பதில்!

மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…

19 hours ago

பொங்கல் ஸ்பெஷல் : தென்மாவட்ட மக்களுக்காக சிறப்பு ரயில்களை அறிவித்த ரயில்வே!

சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…

20 hours ago

கரும்பு சாறில் பொங்கல் செய்யலாமா?. அது எப்படிங்க.?

சென்னை :கரும்புச்சாறை   வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…

21 hours ago

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் வாழ்த்து கூறிய அஜித்குமார்!

சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…

22 hours ago