தமிழகத்தில் அதிரடி திட்டங்கள்., பிரதமர் எந்தெந்த திட்டங்களை திறந்து வைத்தார் தெரியுமா.?
கோவை மொடிசியா அரங்கில் அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.
தமிழகத்தில் புதிய திட்டங்களை தொடங்கி வைக்க இன்று கோவை வந்த பிரதமர் மோடி, கோவை கொடிசியா அரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று, ரூ.12,400 கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைத்தார். இவ்விழாவில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பங்கேற்றனர். திட்டங்களை திறந்த வைத்த பின் பேசிய பிரதமர், சுற்றுச் சூழலை பாதிக்காத தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும் என தெரிவித்திருந்தார்.
- பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ரூ.330 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய குடியிருப்புகளை திறந்து வைத்தார்.
- நெய்வேலியில் ரூ.8,000 கோடி செலவில் உருவாக்கப்பட்ட என்.எல்.சியின் 2 புதிய அனல் மின் நிலையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் 8 வழிச்சாலை கோரம்பள்ளம் பாலம் மற்றும் ரயில்வே பாலம் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
- கீழ் பவானி திட்டத்தை விரிவுபடுத்துதல், புதுப்பித்தல் மற்றும் நவீனமாக்கல் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
- ரூ.107 கோடி செலவில் 9 ஸ்மார்ட் சிட்டி நகரங்களில் ஒருங்கிணைந்த ஸ்மார்ட் சிட்டி கட்டுப்பாட்டு மையத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
- தென் மாவட்டங்களில் 709 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.