மாணவிகள் பாலியல் புகார் மீது நடவடிக்கை; டிஜிபி உத்தரவு.!
கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் விசாரணை நடத்துமாறு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கலாக்ஷேத்ரா கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானதையடுத்து நடவடிக்கை எடுக்க காவல் ஆணையருக்கு, டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் ஒருவர், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவிகள் அளித்த புகாரின் பேரில், விசாரணை நடத்த சென்னை காவல் ஆணையருக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் ஏற்கனவே தேசிய மகளிர் ஆணையம், நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.