100% கல்வி கட்டணம் செலுத்த வலியுறுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை – மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர்
100% கல்வி கட்டணம் செலுத்த வலியுறுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தனியார் கல்வி நிறுவனங்கள் இணையவழியில் பாடம் நடத்தி வருகின்ற நிலையில், பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் கல்விக் கட்டணம் செலுத்துவதற்கு நெருக்கடி அளிக்கக்கூடாதென அரசும், நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, பெரும்பாலான தனியார் கல்வி நிறுவனங்கள் தங்களது பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கு 2019-20-ஆம் கல்வியாண்டுக்கான நிலுவைக் கட்டணம், 2020-21-ஆம் கல்வியாண்டுக்கான கட்டணத்தை செலுத்த வலியுறுத்தி கடிதம் அனுப்புவதாக தகவல்கள் வெளியானது.
இதனையடுத்து, மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குனர், 100% கல்வி கட்டணங்களை செலுத்த வலியுறுத்தும் தனியார் பள்ளிகளின் விவரங்களை உடனடியாக அனுப்ப வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.