அதிமுக எம்எல்ஏ-க்கள் மீதான நடவடிக்கை! மு.க.ஸ்டாலின் கொந்தளிப்பது ஏன்?
கோவை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுத்தால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏன் கொந்தளிக்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், இந்த விவகாரத்தில், தி.மு.க.வும், அ.ம.மு.கவும் கொந்தளிப்பதாகவும், இதன் மூலம் இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள நெருக்கம் தெரியவருவதாகவும் கூறியுள்ளார்.