உயிரிழந்த ராஜாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை.
மீனவர் ராஜா சுட்டுக்கொலை:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கர்நாடக வனப்பகுதிக்கு மான் வேட்டையில் ஈடுபட்டதாக கர்நாடக வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் தமிழக மீனவர் ராஜா என்பவர் உயிரிழந்த சம்பவம் தற்போது பல்வேறு கண்டனங்களை வருகிறது. கோவிந்தம்பாடி எனும் ஊரை சேர்ந்த ராஜா, இளையபெருமாள் மற்றும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ரவி உள்ளிட்ட 4 பேர் தமிழக மற்றும் கர்நாடக எல்லையில் உள்ள பாலாற்றில் மீன் பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது. வனவிலங்குகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட வனப்பகுதியில், தமிழக மீனவர்கள் 4 பேர் நடமாடியதை, வனத்துறை அதிகாரிகள் பார்த்து எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
தமிழக அரசு நிதியுதவி:
இருப்பினும், மான் வேட்டையில் ஈடுபட்டதாக கூறி நால்வரையும் சுற்றிவளைத்து கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், ராஜா என்பவர் ஆற்றில் விழுந்து உயிரிழந்தார். மற்றவர்கள் ஆற்றில் குதித்து தப்பி விட்டனர். இந்த சம்பவது அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ராஜா குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்ததை அடுத்து, கர்நாடக மாநில வனத்துறைக்கு கடுமையான கண்டனங்களையும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் கண்டனம்:
அந்தவகையில், தமிழக மீனவர் ராஜாவை சுட்டு கொன்ற கர்நாடக வனத்துறையின் செயல் கடுமையான கண்டனத்துக்குரியது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது பதிவில், தமிழக மீனவர் அன்புச் சகோதரர் திரு.ராஜாவை சுட்டுக் கொன்ற கர்நாடக வனத் துறையின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. திரு.ராஜாவின் உயிரிழப்பிற்கு காரணமான கர்நாடக வனத் துறையினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தண்டனையை பெற்றுத் தர தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த ராஜாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…