“ஆட்டோ மற்றும் டாக்சிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை” – டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு!
சென்னை:தமிழகத்தில் முழு ஊரடங்கு நாட்களில் ஆட்டோ மற்றும் டாக்சிகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி காவல்துறையினருக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் முழு ஊரடங்கு நாட்களில் ஆட்டோ மற்றும் டாக்சிகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக, காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“கடந்த ஜன.09 மற்றும் ஜன.16 என முழு ஊரடங்கு அமலாக்கப்பட்ட இரு தினங்களிலும் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் காவல்துறையினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளீர்கள்.ஊரடங்கு காலத்தில் சிலர் காவல்துறையினரை தாக்கிய போதும் காவலர்கள் துறைக்குரிய பொறுப்புடன் பணியாற்றியுள்ளீர்கள்.அதற்கு பாராட்டுகள்.
எனினும்,முழு ஊரடங்கு நாட்களில் வெளி ஊர் சென்று திரும்பும் பயணிகள் ஆட்டோ,டாக்சிகள் கிடைக்காமல் அவதியுற்றதாகவும்,சில ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் வந்துள்ளன.எனவே,வெளியூர் சென்று திரும்பும் பயணிகளுக்கு ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தில் ஆட்டோ,டாக்சிகள் கிடைப்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்த வேண்டும்.
குறிப்பாக,முழு ஊரடங்கு நாட்களில் ஆட்டோ மற்றும் டாக்சிகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”,என்று கூறியுள்ளார்.