சத்துணவு பணியாளர்கள் அலட்சியமாக செயல்பட்டால் நடவடிக்கை – அமைச்சர் மதிவேந்தன்
சத்துணவு பணியாளர்கள் மெத்தனபோக்காக செயல்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மதிவேந்தன் பேட்டி.
ராசிபுரத்தில் நடுப்பட்டி பள்ளியில் மதிய உணவு உண்ட மாணவர்களில் 20-க்கும் அதிகமான மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது ஐந்து மாணவிகள் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.
இந்த நிலையில் அமைச்சர் மதிவேந்தன் அவர்கள் அந்த பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பின் சத்துணவு பணியாளர்கள் மெத்தனபோக்காக செயல்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.