அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசினால் நடவடிக்கை – அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை!
அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக எம்எல்ஏகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை.
கோவை மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட விழாவில் பங்கேற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அரசு அதிகாரிகளை ஒருமையிலும், மிரட்டல் மற்றும் எச்சரிக்கை விடுக்கும் தோணியில் பேசுவது என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்கள். அவர்களும் மக்களின் வாக்குகளை பெற்று சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுள்ளனர்.
இனி வர கூடிய காலங்களில் இதுபோன்று அரசு அதிகாரிகளை ஒருமையிலும், மிரட்டும் தோணியிலும் பேசுவது தொடர்ந்தால் கண்டிப்பாக அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைதொடரந்து பேசிய அவர், மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதா என்பது மக்களுக்கு எதிரான சட்டம். குறிப்பாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதே ஒரு கேள்விக்குறியான சட்டமாக இருக்கிறது. இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்து முதலமைச்சர் முக ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். எனவே இதனை பொறுத்திருந்து பார்ப்போம் என அமைச்சர் தெரிவித்தார்.