#BREAKING: அதிமுக கொடியுடன் வந்தால் நடவடிக்கை -காவல்துறை ..!
பெங்களூரில் இருந்து சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை புறப்பட்டார். அதிமுக கொடி பயன்படுத்தக்கூடாது என அதிமுக அமைச்சர்கள் காவல்துறையிடம் புகார் கொடுத்த நிலையிலும் சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி காவல் துணை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சசிகலா வாகனத்தின் பின் 5 வாகனங்கள் மட்டுமே பின் தொடர வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அமுமுக கட்சியினர் இதர வாகனங்களை பின் தொடர்ந்து வர அனுமதி இல்லை. அந்த வாகனங்கள் வழியிலே நிறுத்தப்படும்.
சசிகலா உட்பட யாரும் அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது அப்படி பயன்படுத்துவது விதி மீறலாகும். ஒவ்வொரு வரவேற்பு கூட்டத்தில் 10 சதவீத சீருடையணிந்த அமமுக தொண்டர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.
பட்டாசு வெடிப்பதற்கு பேண்ட் வாத்தியங்கள் இசைப்பதற்கு கண்டிப்பாக அனுமதி இல்லை, கொடி, தோரணங்கள் பேனர்கள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் அனுமதியின்றி வைக்கக் கூடாது. விதிமுறைகளை மீறும் பட்சத்தில் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.