தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – அமைச்சர் ரகுபதி

Published by
லீனா

கடந்த 2018ல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில்,  பின் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம்  விசாரணை மேற்கொண்டது. இதன்பின் இந்த ஆணையம், தனது விசாரணை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. இதில் சிலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பரிந்துரையும் செய்யப்பட்டது.

காதல் திருமண ஜோடி படுகொலை- மேலும் 3 பேர் கைது..!

இந்தநிலையில், சமூக ஆர்வலர் ஹென்றி திபென் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப பரிந்துரைத்த நிலையில், அரசு எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணை நவம்பர் 17க்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் ரகுபதி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; அருணா ஜெகதீசன் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோர்ட்டில் அரசு தெரிவித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

“தல வந்தா தள்ளிப்போகணும்” அஜித்தால் தன் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்த பிரதீப்!

சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…

3 hours ago

தமிழகத்தில் நாளை இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

4 hours ago

“பா.ஜ.க.வின் வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி தீயாக வேலை செய்யும்”..முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று  சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…

5 hours ago

“அதை பற்றி நம்ம பேசவேண்டும்”…லீக்கான ரோஹித் – அஜித் அகர்கர் கலந்துரையாடல்!

டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி  தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…

5 hours ago

ஆளுநரை நான் விமர்சிக்கிறேன் என்பதற்காக அவரை மாற்றிவிடாதீர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று  சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…

5 hours ago

இலவசம் முதல் ரூ.25 லட்சம் வரை… டெல்லி பொதுத்தேர்தல் வாக்குறுதிகள் : ஆம் ஆத்மி vs பாஜக vs காங்கிரஸ்

டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…

6 hours ago