“அவதூறு பரப்பினால் நடவடிக்கை” – அமைச்சர் செந்தில் பாலாஜி
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு.
மின்வெட்டு குறித்து உண்மைக்கு மாறான பொய்யான தகவல்களை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறி வருகிறார் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் கூறுகையில், மின்வெட்டு குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களையும், அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், நேற்று தமிழகத்தில் மின் நுகர்வு அதிகபட்சமாக 388.10 மில்லியன் யூனிட் பயன்படுத்தப்பட்டுள்ளது. மெகாவாட் அளவில் 17,563 MW. இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உட்சபட்ச நுகர்வு ஏப்ரல் 28ல், 387.047மி.யூ / 17,370 MW’ என்றும் தமிழகத்தில் மின்சார பயன்பாடு 2 நாளில் 2 முறை உச்சத்தை தொட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.