தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது முகாந்திரம் இருந்தால் நிச்சயம் நடவடிக்கை.. லஞ்ச ஒழிப்புத்துறை!

Published by
பாலா கலியமூர்த்தி

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதாவது, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ், பொது விநியோக திட்ட ரேஷன் பொருட்கள் கொள்முதல் செய்ததில் ரூ.350 கோடி முறைகேடு என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி புகார் அளித்திருந்தார்.

பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்ததில் 350 கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடு செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக 2018ம் ஆண்டு புகார் அளித்த நிலையில், முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் காமராஜர் மீதான முறைகேடு புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று நீதிபதி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கேள்வி எழுப்பினார். அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை கூறியதாவது, முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான புகார் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படுகிறது. மேலும், அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. டெண்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ய செய்து உண்மையான இழப்பை கண்டறிய வேண்டும் என நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவித்திருந்தது.

முதலமைச்சர் ஸ்டாலின் கருத்துக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை பதிலடி!

இதன்பின், ரூ.350 கோடி முறைகேடு புகார் மீதான நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தர லஞ்சஒழிப்புத்துறை உத்தரவிட்டு, காமராஜ் மீதான புகார் குறித்த விசாரணை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ்-க்கு எதிரான முறைகேடு புகாரில் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2015-2021 டெண்டரில் பங்கேற்ற அதிகாரிகளின் விவரங்கள் உள்ளிட்டவை கேட்டுள்ளோம் என்றும் டெண்டர்களில் பங்கேற்று வெற்றி பெற்ற நிறுவனங்களின் தகவல்களை அளிக்குமாறு பிற துறைகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம் எனவும் லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ரூ.350 கோடி அளவுக்கு முறைகேடு செய்துள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Recent Posts

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

39 mins ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

43 mins ago

வைரலான ‘சம்பவம்.,’ உஷாரான புஸ்ஸி ஆனந்த்.! தவெக மீட்டிங்கில் கூறிய வார்த்தை..,

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

2 hours ago

SL vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை! தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி அசத்தல்!

தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…

2 hours ago

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

3 hours ago