போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீதான நடவடிக்கை வாபஸ்- விஜபாஸ்கர்
போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களின் பணி முறிவு உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு ,மருத்துவர் பணியிடங்களை குறைக்க கூடாது மற்றும் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.பின்னர் முதலமைச்சர் மற்றும் அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலையியில் போராட்டத்தை மருத்துவர்கள் வாபஸ் பெற்றதை அடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களின் பணி முறிவு ( Break In Service) உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது .மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும்.அரசின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை திரும்பப் பெற்ற மருத்துவர்களுக்கு நன்றி என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.