உரக்கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றாத 101 உரக்கடைகள் மீது நடவடிக்கை..!

Default Image

உரக்கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றாத 101 உரக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வேளாண்மைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சாதகமான பருவமழை காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் சம்பா பயிர் நடவுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சம்பா நெல் நடவுப் பணிகள் 13.168 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடப்பு சம்பா நடவுப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதால் உரத்தேவை அதிகரித்துள்ளது.

உரவிற்பனைத் தொடர்பாக விவசாயிகளுக்கு ஏற்படும் இடர்பாடுகளை களைவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் உரக்கண்காணிப்பு மையம் செயல்படுகிறது. விவசாயிகள் உரக் கண்காணிப்பு மையத்தினை தொடர்பு கொண்டு உரம் தொடர்பான புகார்களை பதிவு செய்து வருகின்றனர். விவசாயிகள் தெரிவிக்கும் புகார்மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் 3,391 தனியார் உரக் கடைகளில் வேளாண்மை துறையினரால் உரம் இருப்பு, நிர்ணயிக்கப்பட்ட விலையில் உரங்களை விற்பனை செய்தல் மற்றும் விற்பனை முனைய கருவியின் வாயிலாக பட்டியலிட்டு உரங்களை விற்பனை செய்தல் முதலான பணிகளை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், 3,391 உரக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் உரக்கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றாத 101 உரக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வேளாண்மைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்