விவேகத்துடன் செயல்பட்டு கோவிட் சூழலில் இருந்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும்-சத்குரு

Published by
Dinasuvadu desk

விவேகத்துடன் செயல்பட்டு கோவிட் சூழலில் இருந்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும் என சத்குரு தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

கோவை:இந்த தமிழ் புத்தாண்டில் மக்கள் அனைவரும் விவேகத்துடன் செயல்பட்டு கோவிட் சூழலை கடந்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் அவர் கூறியிருப்பதாவது,

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். நாம் இந்த ‘சார்வரி’ வருடத்தில் இருந்து ‘பிலவ’ வருடத்திற்குள் கால் வைக்கின்றோம். இந்த வருடப்பிறப்பு என்பது நம் தமிழ் கலாச்சாரத்தில் மிகவும் முக்கியமானது.

ஏனென்றால், இங்கு நாம் சந்திரன், சூரியன் மற்றும் வியாழன் ஆகிய கிரகங்களின் சுழற்சிகளை பார்த்தும், அந்த கிரகங்களினால் பூமியின் மீது ஏற்படுகின்ற தாக்கம் எப்படி இருக்கின்றது என்பதை வைத்தும் நம் நாட்காட்டியை உருவாக்கி உள்ளோம்.

இது நாள் கணக்கு போடும் விசயம் மட்டும் அல்ல. நம்முடைய உடலுக்குள்ளும், சுற்றுச்சுழலில் எந்த மாதிரி மாற்றம் நடந்திருக்கின்றது என்பதை எல்லாம் கவனித்து இந்த நாட்காட்டியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த புத்தாண்டை நீங்கள் அனைவரும் ஆனந்தமாக கொண்டாட வேண்டும். கடந்த வருடம் நமக்கு சவாலான வருடமாக அமைந்திருந்தது. கரோனா பெருந்தொற்றின் காரணமாக மக்கள் அனைவரும் பல துயரங்களை சந்தித்தனர். பலர் தங்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அன்பானவர்களை இழக்கும் சூழல் ஏற்பட்டது ஏராளமானவர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

இப்போது நாம் இந்த பிலவ வருடத்திற்குள் கால் வைக்கப் போகிறோம். இந்த பிலவ வருடம் நம்முடைய விவேகத்திடன் சமந்தப்பட்டது.

இந்த வருடத்தில் தமிழ் மக்கள் தேவையான விவேகத்துடன் கோவிட் சூழ்நிலையை கடந்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Published by
Dinasuvadu desk
Tags: ishasadhguru

Recent Posts

பரபரப்பான மேட்ச்.., மிரட்டிய அவேஷ் கான்.., ராஜஸ்தான் அணியை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி.!

பரபரப்பான மேட்ச்.., மிரட்டிய அவேஷ் கான்.., ராஜஸ்தான் அணியை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…

7 hours ago

RR vs LSG: மார்க்ராம் – படோனி அதிரடி அரைசதம்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு..!

ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…

9 hours ago

போதைப் பொருள் வழக்கு: மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஜாமீனில் விடுவிப்பு.!

கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…

9 hours ago

“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!

சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…

10 hours ago

மிரட்டல் நாயகன் பட்லர் தொட்டதெல்லாம் தூள்.., டெல்லியை வீழ்த்தி குஜராத் மாஸ் வெற்றி.!

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…

10 hours ago

ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…

11 hours ago