கோவையில் பரபரப்பு .! பெண் மீது ஆசிட் வீசிய மூதாட்டி கைது.!
கோவை மாவட்டத்திலுள்ள காங்கேயம்பாளையத்தை சார்ந்தவர் மணி. இவருடைய மனைவி சகுந்தலா. மணி வீட்டின் அருகில் ராமாத்தாள் என்பவர் வசித்து வருகிறார். அவருடைய கணவரும் பாலுசாமி கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.
இதனால் ராமாத்தாள் பழைய இரும்பு சாமான்களுக்கு ஈயம் பூசும் வேலைகளை செய்து வருகிறார். ராமாத்தாளுக்கும் , மணிக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் இவர்கள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு இருந்தது.
இந்நிலையில் கடந்த 13-ம் தேதி மணியின் மனைவி சகுந்தலா ராமாத்தாள் வீட்டின் அருகே நடந்து கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ராமாத்தாள் வீட்டில் ஈயம் வைத்திருந்த ஆசிட்டை எடுத்து சகுந்தலா மீது வீசினார்.
இதனால் சகுந்தலா படுகாயத்துடன் கோவை அரசுமருத்துவமனையில் அனுமதித்தனர்.இதையெடுத்து சூலூர் போலீசார் ராமாத்தாள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.