வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு..! அதிமுக முன்னாள் அமைச்சர் மீது இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்!
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.
அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கே.பி.அன்பழகன் ரூ.11.32 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திர மோகன், இவரது மனைவி வைஷ்ணவி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த நிலையில், கே.பி.அன்பழகன் மீது இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. தருமபுரி நீதிமன்றத்தில் காலை 10 மணி அளவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.
முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் மீது தாக்கல் செய்யப்படும் முதல் குற்றப்பத்திரிகை இதுவாகும். 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக கேபி அன்பழகன் சொத்து சேர்த்ததாக குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.