#Breaking:தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கம் மேலும் குறைவு – போக்குவரத்துத்துறை!
தமிழகத்தில் இன்று காலை 11 மணி நிலவரப்படி 32% பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை தகவல்.
நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றது.
வேலை நிறுத்தம் எதனால்?:
விலைவாசி உயர்வு கட்டுப்பாடு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல்,பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதையும்,பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வுக்கும் எதிர்ப்பு தெரிவித்து சிஐடியூ,ஏஐடியூசி,யூடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.மேலும், வங்கி,எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.
எவ்வளவு பேருந்துகள் ஓடவில்லை?:
இதன்காரணமாக,தமிழகத்தில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 67% பேருந்துகள் ஓடவில்லை என்றும்,33%(5,023) பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்தது.குறிப்பாக,சென்னையில் 3175 பேருந்துகளில் 318 பேருந்துகள்(10.02%) மட்டுமே இயக்கப்படுகின்றன என்று தகவல் வெளியாகியிருந்தது.
பேருந்துகள் இயக்கம் குறைவு:
இந்நிலையில்,தமிழகத்தில் அரசு பேருந்துகள் இயக்கம் மேலும் குறைந்துள்ளது.அதாவது,காலை 11 மணி நிலவரப்படி 32% பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பயணிகள் சிரமம்:
இந்த பொது வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்படுவதால் பள்ளி,கல்லூரி மாணவர்கள்,வேலைக்கு செல்பவர்கள் என பலர் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி,கல்லூரி,அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.