PEN India நிறுவனம் வெளியிட்ட ஐஐஎம் நடத்திய சர்வே முடிவுகளின் படி, சமூக வளர்ச்சி, தொழிற்சாலைகளின் எண்ணிக்கை, மனித வளர்ச்சி குறியீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
மக்கள் தொகை, வரி வருவாய், தொழிற்சாலைகள், சமூக வளர்ச்சி குறியீடு, நகரமயம், மனித வளர்ச்சி குறியீடு உள்ளிட்ட காரணிகளை முன்னிறுத்தி தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களை ஒப்பிட்டு ஐஐஎம் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதனை PEN India நிறுவனம் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
மக்கள் தொகை அளவில் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டு மக்கள் தொகை 7.21 கோடியாக உள்ளது. மகாராஷ்டிராவில் 13.28 கோடி மக்கள் தொகையும், குஜராத்தில் 6 கோடி மக்கள் தொகையும் கொண்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநிலத்தில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களுக்கு முக்கிய வருவாயாக இருப்பது மாநிலத்தில் தொழிற்சாலை, தொழில்முனைவோர் மட்டுமின்றி பல்வேறு வகைகளில் அரசாங்கத்திற்கு கிடைக்கும் வரி வருவாய் ஆகும். இந்த வரி வருவாயில், இந்தியாவின் மான்செஸ்டர் மும்பையை கொண்டுள்ள மகாராஷ்டிரா மாநிலம் ரூ.4,51,800 கோடி வரி வருவாய் ஈட்டி முதலிடத்தில் உள்ளது. 2வதாக தமிழ்நாடு ரூ.3,14,800 கோடி வரி வருவாய் ஈட்டுகிறது என்றும், அடுத்து குஜராத் ரூ.1,79,600 கோடி வரி வருவாய் ஈட்டுவதாகவும் சர்வேயில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக வளர்ச்சி குறியீடு என்பது ஒரு மாநிலம் தனிநபர் மற்றும் சமூக நல்வாழ்வுக்காக முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்த அளவீடு ஆகும். அதன் அடிப்படையில் 65.34 சதவீதம் கொண்டு முதல் இடத்தில் தமிழ்நாடு உள்ளது. 57.88 சதவீதம் கொண்டு இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. அதேபோல் 3வது இடத்தில் குஜராத் 56.65 சதவீதத்தை கொண்டுள்ளது.
தொழிற்சாலை எண்ணிக்கையில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 36,000 தொழிற்சாலைகள் தமிழகத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 28000 தொழிற்சாலைகள் உள்ளன. 3வது இடத்தில் 22000 தொழிற்சாலைகளுடன் குஜராத் மாநிலம் உள்ளது.
மக்கள் தொகைக்கு ஏற்ப, பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட காரணிகளை கொண்டு நகரமயமாகும் அளவீடு, தமிழ்நாடு 46.5% கொண்டு முதல் இடத்தையும், மகாராஷ்டிரா 45.2% கொண்டு இரண்டாவது இடத்திலும், குஜராத் 42.5% கொண்டு மூன்றாவது இடத்திலும் உள்ளது.
இது மனித ஒழுக்கம், கற்றல், அறிவு சார்ந்து அறவிடப்படும் குறியீடு ஆகும். இந்த அளவீட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் மகாராஷ்டிரா, 3வது இடத்தில் குஜராத் இடம்பெற்றுள்ளது.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…