சென்னையை சூழ்ந்த கருமேகங்கள்.! இன்று இரவு வரை கனமழை தொடரும். – தனியார் வானிலை.!
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கனமழை காரணமாக பெரும்பாலான இடஙக்ளில் மழைநீர் பெருக்கெடுத்து செல்கிறது . அதனை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள், மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மிக்ஜாம் புயலாந்து நாளை முற்பகல் தான் கரையை கடக்கும் என்பதால் இன்னும் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொது விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கனமழை..! தரையில் இறங்கிய அடுக்குமாடி கட்டடம்..!
சென்னையில் இன்னும் கனமழை தொடரும் என தனியார் வானிலை ஆய்வு மைய தலைவர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும், 2015க்கு பிறகு தற்போது தான் அதிக அளவு மழை பெய்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் சென்னையை சுற்றி கருமேகங்கள் சூழ்ந்துள்ளது. அதனால் புயலின் தாக்கம் இன்று இரவு வரை தொடரும் என்றும், இன்று இரவு வரை கனமழை தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவருடைய எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், மழை விரைவில் நிற்கப் போவதில்லை, மாலை வரை தொடரலாம். இந்த கனமழை பாதிப்பை விளக்க வார்த்தைகள் இல்லை. புயல் சென்னை கடற்கரையை சூழ்ந்து கொண்டிருக்கிறது. மேற்கு மேகங்கள் தீவிரமாக உள்ளது மற்றும் சென்னையில் இன்று மாலை அல்லது இரவு வரையில் கனமழை பெய்யும் என பதிவிட்டுள்ளார்.