அலர்ட்..!வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம்!
தமிழகம்:தென்கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும்,இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி,அடுத்த 36 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்க கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருக்கும் நிலையில்,தென்மேற்கு வங்க கடலை நோக்கி நகரும் என்றும்,அதன்பின்னர் மேற்கு,வடமேற்கு திசையில் நகர்ந்து நவ.11 ஆம் தேதி அதிகாலை வட தமிழக கடலோர பகுதிக்கு அருகே வரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன்காரணமாக,இன்று தமிழகத்தின் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும்.மேலும்,நாளை மற்றும் நாளை மறுநாள் என அடுத்த 2 நாட்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.