#Breaking : வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்.? மீனவர்களுக்கும் எச்சரிக்கை.!
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 48 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலாமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது .
இதன் காரணமாக வரும் 25ஆம் தேதி தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதில், சென்னையில் மட்டும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையும் தெரிவித்துள்ளது.