ரூ.110 கோடி கிசான் ஏப்பம்??? 101 பேர் கைது – சிபிசிஐடி அதிரடி
பிரதமரின் விவசாயி நிதியுதவி திட்ட முறைகேடு விவகாரத்தில் 101 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடியின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கும் திட்டமானது இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படுகிற்து.
3 மாதத்திற்கு ரூ.2,000 ஆயிரம் என்று வழங்கப்பட்டு வரும் இத்திட்டத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கிசான் திட்டத்தில் பயன்பெற இணையம் மூலம் பலர் விண்ணப்பித்து உள்ளனர்.
இவ்வாறு விண்ணப்பித்தவர்களில் விவசாயிகள் அல்லாதவர்களும் விண்ணப்பித்து முறைகேடாக உதவித்தொகையை பெற்றதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் முறைகேடு நடைபெற்று உள்ளதா? என்று வருவாய்த்துறையினர், வேளாண்மைத் துறை அடங்கிய குழு கிராமங்களுக்கே களமிரங்கி விசாரணை நடத்தி வருகின்றது.
இந்நிலையில், பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்ட முறைகேடு குறித்து இதுவரை 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,சுமார் 105 கோடி ரூபாய் இது தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்
மேலும் கிசான் திட்ட மோசடி தொடர்பாக 100 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்தனர்.