இந்திய அளவில் அதிகம் மாசடைந்த ஆறாக கூவம் ஆறு இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அண்மையில் இந்தியாவில் உள்ள மாசடைந்த ஆறுகளின் பட்டியலை கணக்கெடுத்தது. அதில் எந்த ஆறு மிகவும் மாசடைந்து உள்ளது என சர்வே ரிப்போர்ட்டை அண்மையில் வெளியீட்டு உள்ளது. அதில் அதிர்ச்சி செய்தியாக சென்னை கூவம் ஆறு அதிகம் மாசடைந்த பட்டியலில் முன்னணியில் உள்ளது.
இந்தியாவில் 28 மாநிலங்கள் ஏழு யூனியன் பிரதேசங்களில் மாசடைந்த ஆறாக கருதப்பட்ட மொத்தம் 311 ஆறுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் தரம் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக ஆய்வு செய்யப்பட்டது. அதாவது அந்த ஆறுகளில் இருந்து ஒரு லிட்டர் தண்ணீர் எடுத்து அதில் ஆக்சிஜனை உட்செலுத்தி எந்த அளவுக்கு ஆக்சிஜனை செலுத்தினால் அது தூய தண்ணீராக மாறும் என்பதை கணக்கிட்டு, எந்த ஆற்று நீர் அதிக அளவு ஆக்சிஜனை எடுத்து கொண்டு தூய நீராக மாறுகிறதோ அது மாசடைந்த ஆறாகவும், அதன் மாசு அளவும் கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது.
அப்படி மேற்கொண்ட ஆய்வில்தான், இந்தியாவில் அதிகம் மாசடைந்த ஆறாக கூவம் ஆறு தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் பாயும் அடையாறு, அமராவதி, பவானி ஆறு, காவிரி ஆறு, பாலாறு, தாமிரபரணி ஆறு, மணிமுத்தாறு உள்ளிட்ட நதிகளும் மாசடைந்து உள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…