#Accident : தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு..!

accident

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு. 

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில், ஐந்து பேரின் நிலை கவலைக்கிடமாக இருந்தது. 90-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், விபத்தில் காயமடைந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால், இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்