ஒரே வண்டி எட்டு கார் மீது மோதி கோர விபத்து.!

Default Image

தருமபுரியில் தொப்பூர் கணவாய் நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி, முன்னே சென்று கொண்டிருந்த கார்கள் மீது அடுத்தடுத்து மோதி கோரவிபத்து.

சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய இரு மாவட்டங்களின் எல்லையாக தொப்பூர் கணவாய்ப் பகுதி உள்ளது. அதே இடத்தில நேற்று கோர விபத்து நடந்துள்ளது. அதாவது, வேலூர் மாவட்டத்தில் இருந்து ஒரு சரக்கு லாரி நேற்று மாலை 3 மணியளவில் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த லாரி தொப்பூர் கணவாய் அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது திடீரென்று மோதி விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், ஒரு மைல் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதன்பின் ஆந்திராவில் இருந்து கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னே சென்று கொண்டிருந்த கார்கள் மீது அடுத்தடுத்து மோதியது. லாரி பலமாக மோதியதில் ஒவ்வொரு வாகனமும் அதற்கு முன்னால் சென்ற மற்ற வாகனங்களின் மீது தாறுமாறாக மோதி பெரும் விபத்து உண்டானது. சில கார்கள் அப்பளம்போல் நொறுங்கின. இந்த விபத்தில், 8 கார்கள் சேதமடைந்துள்ளன. அதில், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்