“கொச்சி அருகே நடுக்கடலில் விபத்து;மத்திய,மாநில அரசுகள் அக்கறை காட்டாதது ஏமாற்றமளிக்கிறது” – சீமான்…!

Default Image

கொச்சியில் கடலில் மூழ்கியுள்ள நாகை மீனவர்களது விசைப்படகை மீட்டெடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொச்சி அருகே நடுக்கடலில் நாகை மீனவர்களது விசைப்படகு விபத்துக்குள்ளாகி மூழ்கித் தத்தளித்த 11 மீனவர்களும் மீட்கப்பட்டது பெரும் ஆறுதலைத் தருகிறது.

எனினும்,மூழ்கிய விசைப்படகினையும் மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியதாவது:

“கொச்சி அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்களது விசைப்படகு விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கிய செய்தியறிந்து கவலையுற்றேன். கடந்த மாத இறுதியில் நடைபெற்ற இவ்விபத்தின்போது நடுக்கடலில் மூழ்கித் தத்தளித்த அவ்விசைப்படகைச் சேர்ந்த 11 மீனவர்களும் மீட்கப்பட்டது பெரும் ஆறுதலைத் தந்தாலும் மத்திய, மாநில அரசுகள் விசைப்படகை மீட்டெடுக்க எவ்வித அக்கறையும் காட்டாதது ஏமாற்றத்தைத் தருகிறது.

மீன்பிடித்தொழில் நலிவடைந்து, மீனவர்களது பொருளாதார இருப்பு கேள்விக்குறியாகி வரும் தற்காலச்சூழலில் ஒரு கோடி மதிப்பிலான விசைப்படகை இழப்பதென்பது அதனைச் சார்ந்திருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதித்திட வழிசெய்யும் பேராபத்தாகும். ஆகவே, இவ்விவகாரத்தில் மாநிலத்தை ஆளும் திமுக அரசும், ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும் உரிய கவனமெடுத்து மூழ்கிய விசைப்படகினை மீட்டுத் தந்து, மீனவர்களது துயரத்தினைப் போக்கிட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்”,என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
IND VS NZ CT 2025
mookuthi amman 2
sunil gavaskar rohit sharma
Actor Abhinay
gold price
Tamilisai Soundararajan Selvaperunthagai