கோவையில் கோர விபத்து..தந்தை பலி…மகன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.!!

KovaiAccident

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் என்பவர்  தன்னுடைய மகன் அஜ்மலை (15) திருச்சி மாவட்டத்தில் நடக்கும் கபடி போட்டியில் பங்கு பெறுவதற்காக பயிற்சியாளரிடம் கொண்டு போய் விட தன்னுடைய   இரு சக்கர வாகனத்தில்  தனது மகனை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய மகனுடன் கோவை மாவட்டம் கே.ஜி.சாவடி பகுதியில் ஜாகிர் உசேன் சென்றுகொண்டிருந்த நிலையில், அப்பகுதியில், அதி வேகமாக வந்த கார் பைக் மீது மோதியதில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் தந்தை (ஜாகிர் உசேன்) உயிரிழந்த நிலையில், அவருடைய மகன் (அஜ்மல்) படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிகப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி மனதை உலுக்கியுள்ளது. வீடியோக்களை பார்த்த பலரும் சாலை விதிகளை மதிக்காத காரின் தவறு, பைக்கில் பயணம் செய்தவர்களின் உயிரில் விளையாடியுள்ளது எனவும் கார் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் எனவும் தெரிவித்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்