விபத்தில்லா தீபாவளி…! அமைச்சர் கணேசன் அறிவுறுத்தல்…!
விபத்து ஏற்படுவதை தவிர்க்க பட்டாசு ஆலைகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு வருடமும், பொதுமக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையின் போது, சிவகாசியில் உள்ள ஆயிரக்கணக்கான பட்டாசு தொழில்சாலைகள் பட்டாசு தயாரிக்கும் பணிகள் மும்முரமாக ஈடுபடுவதுண்டு. இப்படிப்பட்ட சமயங்களில் விபத்து ஏற்படுவதை தவிர்க்க பட்டாசு ஆலைகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பட்டாசுகளில் சரியான முறையில் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், விபத்தில்லா தீபாவளியை உறுதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.