#Accident : திருத்தணி அருகே பேருந்து மோதி 2 பக்தர்கள் உயிரிழப்பு..!
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற திண்டிவனத்தை சேர்ந்த பக்தர்கள் மீது அரசு பேருந்து மோதி விபத்து.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பொன்பாடி பகுதியில் அரசு பேருந்து மோதியதில் இரண்டு பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற திண்டிவனத்தை சேர்ந்த பக்தர்கள் மீது அரசு பேருந்து மோதி உள்ளது.
சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்த ஐந்து பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து காரணமாக சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.