‘என்னை உங்கள் சகோதரனாக ஏற்றுக்கொள்ளுங்கள்’ – இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்…!

Published by
லீனா

இலங்கை தமிழர்கள் அகதிகளோ, அனாதைகளோ அல்ல. நாங்கள் இருக்கிறோம். இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் உள்ள 106 முகாம்களில் இலங்கை தமிழர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்ட அடிக்கல் நாட்டினார். வேலூரில் அருகே மேல்மொனவூரில் உள்ள இலங்கை  மறுவாழ்வு முகாமில் நடந்த விழாவில், இலங்கை தமிழர்களுக்காக முதல்கட்டமாக ரூ.142.16 கோடி செலவில் 3,510 புதிய வீடுகள் கட்ட அடிக்கல் நாட்டினார். மேலும், மறுவாழ்வு முகாம்களில் ரூ.30 கோடி மதிப்பிலான இதர அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

மேலும் பி.இ மாணவி ஒருவருக்கு இலவச கல்விக்கான முழு கல்வி கட்டண காசோலையை முதல்வர் வழங்கினார். மேலும், அங்கு இலங்கை தமிழர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் அவர்கள், தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் ஒருதாய் மக்களே; கடல் தான் நம்மை பிரிக்கிறது. இலங்கை தமிழர் விட்ட கண்ணீர் மறக்க முடியாது. இலங்கை தமிழர்கள் அகதிகளோ, அனாதைகளோ அல்ல. நாங்கள் இருக்கிறோம். இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல. என்னை உங்களின் சகோதரனாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

Recent Posts

2025ம் ஆண்டுக்கான அரசு பொதுவிடுமுறை நாட்கள் வெளியானது!

2025ம் ஆண்டுக்கான அரசு பொதுவிடுமுறை நாட்கள் வெளியானது!

சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…

43 minutes ago

இப்படி கூட சிக்ஸர் அடிக்கலாமா? ஆஸ்திரேலியாவை மிரள வைத்த ரிஷப் பண்ட்!

பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…

55 minutes ago

ஏ.ஆர்.ரகுமான் – மோகினி டே வதந்திகள் குறித்து மனம் திறந்த அமீன்!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…

1 hour ago

உயர்ந்தது அதானி பங்குகள்! ஏற்றத்துடன் நிறைவான இந்திய பங்குச்சந்தை!

மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…

1 hour ago

ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து பற்றி பரவும் வதந்தி! மௌனம் கலைத்த மகள் ரஹீமா!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…

1 hour ago

அதானி குழுமம் மீதான குற்றசாட்டு! விசாரணையை தொடங்கியது செபி!

டெல்லி : அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில்,…

2 hours ago