கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு நடப்பதாக புகாரை அடுத்து வருவாய் துறையினருடன் இணைந்து வேளாண் அதிகாரிகள் விசாரணை.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் பிரதமர் கிசான் திட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படும் என 2018-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த ரூ.6000 நான்கு மாதத்திற்கு ரூ.2000 என வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி விவசாயிகள் வருவாய்த் துறையிடம் தங்கள் நிலத்திற்கான பட்டா சிட்டா சான்றிதழ் வாங்கிக்கொண்டு வேளாண்மை துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து இந்த உதவித்தொகையை பெற்று வந்தனர். பின்னர் குறைந்த அளவே விவசாயிகள் பயன் பெறுவதால் அதிகளவு விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயிகளே தானாக முன்வந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தளவில் இதுவரை ஒரு லட்சத்து 79,000 விண்ணப்பங்கள் வந்துள்ளது. இதில் சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. அதுவும், இதுவரை வேளாண்மை துறை அனுமதியோடு விவசாயிகளுக்கு சென்றுள்ளது. கடலூர் அடுத்த பிள்ளையார் மேடு கிராமத்தில் விவசாயிகள் அல்லாதவர்களின் வங்கி கணக்கில் ரூ.4,000 சென்றுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியில் அடைந்தனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த ஒரு தனிநபர் தங்களது வங்கிக் கணக்கில் நான்காயிரம் செலுத்தி இருப்பதாகவும் ஆயிரம் ரூபாய் தனக்கு கமிஷனாக கொடுக்கும்படி கேட்டுள்ளார். இதையடுத்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் சென்றுள்ளது. புகாரின்பேரில் ஆட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் கடலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் முறைகேடு அதிக அளவில் நடைபெற்று இருப்பதால் தற்காலிகமாக இந்த திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அந்தந்த மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு வேளாண்மை துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார். இதனால் பல மாவட்டங்களில் பிரதமர் கிசான் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விவசாயி ஒருவர் நிலத்திற்கான சான்று வைத்திருந்தால் மட்டுமே ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தாலும் அதனை மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்திய பின்னர் தான் சம்பந்தப்பட்ட விவசாயிகள் வங்கி கணக்கில் பணமானது செலுத்தப்படும் ஆனால் கடலூரில் விவசாயிகளே அல்லாத 500க்கும் மேற்பட்டோர் வங்கி கணக்கில் தற்போது ரூ.4,000 செலுத்தப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…