அறந்தாங்கி சிறுமி பாலியல் வன்கொடுமை! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேதனை!
அறந்தாங்கி சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.
அறந்தாங்கியைச் சேர்ந்த 7 வயது சிறுமி காணாமல் போன நிலையில், அவரது உடல் வறண்ட குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடல் ரத்த காயங்களுடன் கிடந்தது. இதைத்தொடர்ந்து, விசாரணையில் சிறுமிபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதனையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 7 வயது சிறுமியின் உடல் ரத்தாகாயங்களுடன் குளம் ஒன்றில் கிடந்தது என்பது அதிர செய்கிறது என்றும், பெண்கள் – குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்படுகிறது என்றும், இத்தகைய கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வேண்டும்.’ என்றும் வலியுறுத்தி உள்ளார்.