சர்ச்சைப் பேச்சு விவகாரம்: தலைமறைவான நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் கோரி மனு!

அவதூறாக பேசிய விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி நடிகை கஸ்தூரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

kasthuri

சென்னை : சென்னையில் பிராமணர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட போது, தெலுங்கு மக்கள் பற்றி அவதூறாக பேசியதாக பதிவான வழக்கில் முன்ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடிகை கஸ்தூரி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், திராவிடம் பற்றியும் தெலுங்கு மக்கள் பற்றிய சர்ச்சைப் பேச்சு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, பெரும் சர்ச்சை எழுந்தவுடன் கஸ்தூரி விளக்கம் அளித்தார், பின்னர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து தனது கருத்தை வாபஸ் பெற்றார்.

இருந்தாலும், கஸ்தூரி மீது அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் அளித்த புகார் அடிப்படையில், அவர் மீது கலவரத்தை தூண்டும் நோக்கில் பேசுவது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால், எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்பதாலும், போலீசாரின் சம்மனை ஏற்க மறுத்து நடிகை கஸ்தூரி தலைமறைவானார்.

இந்நிலையில், தான்நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன் என முன் ஜாமீன் கோரினார். இந்த முன்ஜாமீன் மனு நாளை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Wayanad - Jarkhand election
vijay angry
Vignesh
Stanley Government Hospital
karthikai special (1)
Rashmika Mandanna
Kalaignar Centenary Hospital