கர்நாடக எல்லையில் 1.28 கோடி ரூபாய் கள்ள நோட்டுகள்.! நெல்லையை சேர்ந்த 3 பேர் கைது.!
கர்நாடக எல்லையில் நடந்த சோதனையில் சுமார் 1.28 கோடி ரூபாய் கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கள்ளநோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் அவ்வப்போது ரோந்து பணிகளில் ஈடுப்பட்டு சோதனை செய்து அதன் மூலம் நடவடிக்கை எடுத்து வந்தாலும், அவ்வப்போது இந்த கள்ளநோட்டு புழக்கம் அரங்கேறி வருகிறது.
அதன்படி, தற்போது ஓசூர் அருகே கர்நாடகா எல்லையான சித்தபுரா பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது ஒரு வாகனத்தில் சோதனை செய்ததில் அந்த வாகனத்தில் 1.28 கோடி ரூபாய் கள்ளநோட்டு இருந்தது கண்டறியப்பட்டது.
இந்த கள்ளநோட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக திருநெல்வேலியை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்த கள்ளநோட்டு, அவர்கள் பயன்படுத்திய வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.