நீட் ஒழிப்பு! எங்களுடன் துணை நில்லுங்கள்.. பெருமையை உங்களுக்கே தந்துவிடுகிறோம் – அமைச்சர் உதயநிதி

TN Minister Udhayanidhi Stalin

நீட் தேர்வு ஒழிப்பிற்கு எதிராக ஒன்று சேர்ந்து போராட அதிமுகவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். சமீபத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நீட் விலக்கு – நம் இலக்கு என்ற தலைப்பில் திமுக இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறும் இயக்கம் தொடங்கப்பட்டது. நீட் ஒழிப்புக்கான கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தனர்.

நீட் தேர்வு எதிர்ப்புக்கு திமுக கையெழுத்து வாங்குவது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று விமர்சித்தும் இருந்தார். அதாவது, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு கையெழுத்து என்பது திமுகவின் நாடகம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், நீட் தேர்வு ஒழிப்பிற்கு எதிராக ஒன்று சேர்ந்து போராட அதிமுகவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேனி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு.! முதல்வர் அறிவிப்பு.!

அப்போது, திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜகவின் அழுத்தத்தால் அதிமுக நீட் தேர்வை உள்ளே நுழைத்தது. தற்போது நீட் தேர்வு எதிர்ப்பில் எங்களுடன் துணை நில்லுங்கள். நீட் விலக்கு வந்தால் அந்த பெருமையை அதிமுகவுக்கே தந்து விடுகிறோம் என அழைப்பு விடுத்துள்ளார். நீட் தேர்வை அரசியலாக்க வேண்டாம். மாணவர்களுக்காக ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்துவோம். நீட் ஒழிப்பு கையெழுத்து இயக்கத்தில் 50 நாளில் 50 லட்சம் கையெழுத்து பெற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

நீட் எதிர்ப்பு கையெழுத்து.. திமுகவின் நாடகம்.! அண்ணாமலை கடும் விமர்சனம்.!

இதனிடைய பேசிய அவர், பிரதமர் மோடியை கண்டு திமுக அச்சப்படுவதாக பாஜக கூறுகிறது. மோடியைக் கண்டு திமுகவின் கிளை செயலாளர்கள் கூட அஞ்சமாட்டார்கள்.வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, விமானி இல்லாமல் கூட செல்லுவார். ஆனால் அதானி இல்லாமல் செல்ல மாட்டார் என விமர்சித்தார். திமுக ஆட்சிக்கு வந்தால் கலைஞர் குடும்பம் தான் வாழ்கிறது என மோடி கூறுகிறார். ஆமாம், தமிழ்நாடு மக்கள் முழுவதுமே கலைஞர் குடும்பம் தான். உழைப்பால் உயர்ந்து உழைப்பின் மூலமே முதல்வராக பதவி வகித்து வருபவர் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எனவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்