செவிலியர் பணி நீக்கத்தை ரத்து செய்க – முத்தரசன்
தற்காலிக பணியாக நியமனம் செய்யப்பட்ட செவிலியர்களை பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது ஏற்கத்தக்கது அல்ல என முத்தரசன் குற்றசாட்டு.
கொரோனா காலத்தில் பணிபுரிந்த தற்காலிக செவிலியர்களின் பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். கொரோனா காலத்தில் பணிபுரிந்த தற்காலிக செவிலியர்கள் நீக்கம் செய்யப்பட்டிருப்பது ஏற்கத்தக்கது அல்ல.
உருமாறிய கொரோனா பரவும் சூழலில் செவிலியர்கள் தேவை, எனவே பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். இதனால் அவர்களை மீண்டும் பணியமர்த்துமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு, தமிழ்நாடு அரசையும், முதல்வரையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என தெரிவித்துள்ளார்.