கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி இந்தியாவின் மிராஜ் 2000 என்ற 12 போர் விமானங்கள் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாமை அழித்தது.அதேபோல் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுக்கு பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து வந்தது.
பின் பிப்ரவரி-27 ஆம் தேதி பாகிஸ்தான் விமானப்படை விமானமான F16 இந்தியாவிற்குள் அத்துமீறியபோது இந்திய விமானப்படையின் மிக் 21 போர் விமானத்தால் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.ஆனால் அந்த தாக்குதலின்போது மிக் 21 போர் விமானத்தை காணவில்லை.அதேபோல் விமானியையும் காணவில்லை(விமானி அபிநந்தன் சென்னையை சேர்ந்தவர்).
பாகிஸ்தானிடம் இது தொடர்பாக கேட்டபோது, விமானி அபிநந்தன் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்தது.பின்னர் விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் இருக்கும் நிலையில் அவரை மீட்க இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு வெளியிட்டார்.அதில் அபிநந்தன் மார்ச் 1-ஆம் தேதி விடுவிக்கப்படுவார்.இம்ரான் கான் அறிவித்தவுடன் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி.க்கள் அனைவரும் ஒப்புதல் தெரிவித்தனர்.
அதன்படி மார்ச் 1-ஆம் தேதி இருநாட்டு சட்ட நடவடிக்கைகளைத் தொடா்ந்து அபிநந்தன் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டாா்.
இவர் பாகிஸ்தானிடம் சிக்கிய நாள் முதலே இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களிலும் இவரது பெயர் அதிகமாக பேசபட்டு வந்தது.அதேபோல் பாகிஸ்தானில் இருந்து விடுவிக்க கோரியும் இந்தியாவில் ஆதரவு பெருகிவந்தது.விடுதலை ஆனா பின்னரும் அவருக்கு இந்தியாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.அதேபோல் அவரது மீசை போல பலரும் வைத்து அழகு பார்த்தனர். அவரது ஹேர்-ஸ்டைல் என பல தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
இந்நிலையில் அதேபோல் ராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்ற திருமணத்தில் வைக்கப்பட்ட பேனரில் அபிநந்தனின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.பொதுவாக விழாக்களில் வைக்கப்படும் பேனர்களில் அரசியல் கட்சி பிரமுகர்கள்,நடிகர்கள்,நடிகைள்,விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டவர்களின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும்.இந்த நிலையில் திருமண நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட பேனரில் அபிநந்தனின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது அங்குவந்தவர்களிடம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எந்த காலத்திலும் அபிநந்தன் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பார் என்பதற்கு இது ஒரு சான்றாகும்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…