அபிநந்தனை கவுரவிக்கும் வகையில் 341 கிலோ எடை கொண்ட சாக்லெட்டில் உருவம்.!

Default Image
  • அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவத்தில் சிக்கி கொண்டார். அப்போது அபிநந்தன்  தைரியத்துடன் செயல்பட்டார்.
  • அபிநந்தனை கவுரவிக்கும் வகையிலும் புதுச்சேரியில் உள்ள ஒரு  தனியார் நிறுவனம்  341 கிலோ எடை கொண்ட சாக்லெட் மூலம் அபிநந்தன் உருவத்தை உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த வருடம் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவத்தில் சிக்கி கொண்டார். அப்போது அபிநந்தன்  தைரியத்துடன் செயல்பட்டார்.அதனால் பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பொதுமக்கள் என அனைத்து அனைவரும்  பாராட்டினர்.

இந்நிலையில் வருகின்ற 25-ம் தேதி கிறிஸ்துமஸ், இதை தொடர்ந்து புத்தாண்டை வருவதை ஒட்டி வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும் , இந்திய விங் கமாண்டர் அபிநந்தனை கவுரவிக்கும் வகையிலும்  புதுச்சேரியில் உள்ள ஒரு  தனியார் நிறுவனம் அபிநந்தன் உருவத்தை 5 அடி உயரமும், 10 அங்குலத்தில் 341 கிலோ எடை கொண்ட சாக்லெட் மூலம்  உருவாக்கப்பட்டு உள்ளது.

அபிநந்தனை கவுரவிக்கும் வகையில் 341 கிலோ எடை கொண்ட சாக்லெட்டில் உருவம்.!

இதற்காக சாக்லெட் பெல்ஜியத்திலிருந்து கொண்டுவரப்பட்டு செய்யப்பட்டுள்ளது.இந்த சிலை பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.இந்த சிலையை அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் 124 மணி நேர செலவு செய்து  உருவாக்கி உள்ளார். ஏற்கனவே இவர் காந்தி, சுதந்திர தேவி சிலை, அப்துல்கலாம் போன்ற சாக்லெட் சிலைகளை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்