சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் புதிய ஐ.ஜி.யாக அபய்குமார்சிங் நியமனம்…!
சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் புதிய ஐ.ஜி.யாக அபய்குமார்சிங்கை நியமித்தது தமிழக அரசு.
நேற்று ரயில்வே காவல்துறை ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது.
நேற்று தனது பிரிவு உபசார விழாவில் ரயில்வே காவல்துறை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறுகையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளிடம் ரயில்வே போலீசார் வாக்குமூலம் வாங்கினால் செல்லும்.வேலையில் இருக்கும் நல்லது, கெட்டதுகளை ஏற்கும் மனநிலைக்கு ரயில் போலீசார் வர வேண்டும்.எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டவுடன் முன் ஜாமீன் கேட்டு கோர்ட்டுக்கு ஓடி விடுகிறார்கள், ஒரு வேளை ஜாமீன் கிடைக்கவில்லை என்றால் வேறு வழியில்லாமல் கைது செய்ய வேண்டியதாகி விடுகிறது. நம் மண்ணுக்கேற்ற சட்டங்கள் இங்கு இல்லை என்றும் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார்.
இந்நிலையில் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் இன்றுடன் ஒய்வு பெற உள்ளார்.இதனால் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் புதிய ஐ.ஜி.யாக அபய்குமார்சிங்கை நியமித்தது தமிழக அரசு.காகித நிறுவனத்தின் ஊழல் கண்காணிப்பு ஆணையராக பணியாற்றியவர் அபய்குமார் சிங்.