ஏசி ரூம், லேப் டாப் என நவீனங்களுக்கு மாறிய மடாதிபதிகள்.. இதை ஏன் விடமாட்டுகிறார்கள்? – பழ.நெடுமாறன்

Default Image

மடாதிபதிகள் உள்பட யாராக இருந்தாலும் உலகத்தோடு ஒட்டிச் செல்ல வேண்டும் என பழ.நெடுமாறன் அறிக்கை.

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டிணப்பிரவேச விழாவில் ஆதினம் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை விதித்து அம்மாவட்ட கோட்டாட்சியர் உத்தரவிட்டிருந்தார். இதற்கு ஒருபக்கம் வரவேற்பு அளித்த நிலையில், மறுபக்கம் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. அந்தவகையில், தருமபுரம் ஆதினம் பட்டிணப் பிரவேசத்திற்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்திருந்தார். பாரம்பரியமாக நடந்து வரும் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்குவதற்கு விதித்த தடையை நீக்க வேண்டும் என அதிமுக, பாஜக வலியுறுத்தி வருகிறது.

இதனைத்தொடர்ந்து, பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பல்லக்கில் தூக்க தடை விதிக்கப்பட்ட விகாரத்தில் தருமபுரம் ஆதீனத்துடன் பேசி முதல்வர் முடிவெடுப்பார் என்றும் மே 22ல் தான் பல்லக்கு தூக்கு நிகழ்வு நடக்கிறது, அதற்குள் பேசி விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில், தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன், பல்லக்கு விகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், பல்லக்கில் பவனி வருவது என்பது பாரம்பரிய பழக்கமாகும். அதை ஒருபோதும்  அதை ஒருபோதும் கைவிட மாட்டோம் எனக் கூறும் மடாதிபதிகள், தங்களின் மடத்து அறையில் குளிர்சாதனம் பொருத்தியிருப்பது ஏன்? குளிர்சாதனம் பொருத்தப்பட்ட விலையுயர்ந்த கார்களில் பவனி வருவது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

தொலைப்பேசி, கைப்பேசி மற்றும் கணினி, வானொலி, தொலைக்காட்சி போன்ற மிக நவீன சாதனங்களை மடங்களில் வைத்திருப்பது ஏன்? பக்தர்களுக்கு அருளுரை ஆற்றும்போது ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவது ஏன்? நவீன சாதனைகளை பயன்படுத்தும் போது மனிதனை மனிதர்கள் சுமக்கும் பழக்கத்தை மட்டும் கைவிட மறுப்பது ஏன்? என்று கேட்கிறார். மடாதிபதிகள் உள்பட யாராக இருந்தாலும் தாங்கள் வாழும் காலத்திற்கு ஒவ்வாத பழக்க வழக்கங்களை கைவிட்டு உலகத்தோடு ஒட்டிச் செல்லவேண்டும். இல்லையேல் மக்களால் புறக்கணித்து ஒதுக்கப்படுவார்கள் என்று எச்சரிக்க விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்