தேசிய மருத்துவ தகுதித்தேர்வை கைவிட வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

MK Stalin

NExT என்ற தேசிய மருத்துவத் தகுதித் தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த தேசிய அளவிலான தேர்வாகவும், முதுகலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும் மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள NExT என்ற தேசிய மருத்துவ தகுதித் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், மருத்துவ மாணவர் சேர்க்கையில், நீட் தேர்வு ஏற்கெனவே மோசமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், NExT தேர்வை அறிமுகப்படுத்துவது கிராமப்புற மற்றும் சமூகரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும், மாநில அரசின்கீழ் இயங்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதால், NExT தேர்வுவை கைவிட வேண்டுமென்றும் தற்போதுள்ள முறையே தொடர வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

எம்பிபிஎஸ் முடித்த மாணவர்கள் மருத்துவராக பணியாற்றவும், வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று இந்தியாவில் பதிவு செய்து பணியாற்றவும் National Exit Test (NExT) என்ற தகுதித்தரவு அடுத்தாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்திருந்தது.

அதன்படி, முதுநிலை நீட் தேர்வு மற்றும் இறுதியாண்டு எம்பிபிஎஸ் தேர்வை ஒருங்கிணைத்து இந்த நெக்ஸ்ட் தேர்வு நடத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், தேசிய மருத்துவ தகுதித்தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் தற்போதுள்ள முறையே தொடர எனவும் பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்