தீமைக்கு விசுவாசமாக இருப்பதை கைவிடுங்கள் – சு.வெங்கடேசன் எம்.பி

M.P venkatesan Neet

இல்லாத அதிகாரத்தை பயன்படுத்துகிற உங்கள் பழக்கத்தையே நிறுத்துங்கள் என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். 

செந்தில் பாலாஜி மீது ஊழல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளநிலையில்  அமலாக்கத்துறை விசாரணை பாதிக்கப்படும் என்பதால் அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்குவதாக ஆளுநர் உத்தரவிட்டிருந்த நிலையில், சில மணி நேரங்களிலேயே இந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது.

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆளுநரின் செய்திகுறிப்பு நிறுத்தி வைப்பு. ஆளுநரை நீக்க இராஜ்பவன் தோட்டக்காரருக்கு எப்படி அதிகாரம் இல்லையோ அப்படித்தான் அமைச்சரை நீக்கும் அதிகாரம் உங்களுக்கில்லை ஆளுநரே. இல்லாத அதிகாரத்தை பயன்படுத்துகிற உங்கள் பழக்கத்தையே நிறுத்துங்கள். தீமைக்கு விசுவாசமாக இருப்பதை கைவிடுங்கள்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்