நாளை தங்கு தடையின்றி ஆவின் பால் கிடைக்கும்.! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.!
நாளை பொதுமக்கள் நலன் கருதி ஆவின் பால் வினியோகிக்கப்படும் அனைத்து ஆவின் கிளைகளிலும் பால் தங்கு தடையின்றி கிடைக்கும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை ஒருநாள் நாடு முழுவதும் சுய ஊரடங்கு நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி அனைத்து பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனால் நாளை தமிழகத்தில் அனைத்து கடைகள், ஹோட்டல்கள் , டாஸ்மாக் மதுபான கடைகள் நாளை ஒருநாள் மட்டும் மூடப்படும் எனவும் மேலும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.