சென்னையில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு இல்லை !
சென்னையில் ஆவின் பாலுக்குத் தட்டுப்பாடு இல்லை என்று வள்ளலார் அறிவிப்பு.
கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், சென்னையில் ஆவின் பாலுக்குத் தட்டுப்பாடு இல்லை என்று ஆவின் பாலகம் நிர்வாக இயக்குனர் வள்ளலார் அறிவித்துள்ளார். ஆவினுக்கு சொந்தமான லாரிகள் மூலமாகவும், தனியார் வாகனங்கள் மூலமாகவும் சென்னையில் சுமார் 13.26 லட்சம் லிட்டர் பால் கொண்டு வரப்பட்டு தட்டுப்பாடு இல்லாமல் விற்பனை செய்து வரப்படுகிறது என்று ஆவின் நிர்வாக இயக்குனர் வள்ளலார் கூறியுள்ளார்.