இனிமேல் பால் வீடு தேடி வரும் ! ஸ்விகி நிறுவனத்துடன் ஆவின் பால் ஒப்பந்தம் !
இனிமேல் பால் வீடு தேடி வரும். ஸ்விகி நிறுவனத்துடன் ஆவின் பால் ஒப்பந்தம் !
ஆவின் நிர்வாகம் பால் பொருட்களை வாடிக்கையாளர்கள் வீடு தேடி சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தனர். ஏப்ரல் 24ம் தேதி முதல் ஸ்மோடோ, டன்சோ நிறுவனங்கள் மூலம் சேவையாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், தற்போது ஸ்விகி நிறுவனத்துடனும் சேவையாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டதாக ஆவின் நிர்வாகத்தின் இயக்குனர் வள்ளலார் அறிவித்துள்ளார். மக்கள் ஸ்விகி, ஸ்மோடோ, டன்சோ ஆகிய நிறுவனங்கள் மூலமாகவும் நேரடியாக பால் மற்றும் பால் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.