Coronalockdown : வீடு தேடி விற்பனை செய்ய ஆவின் பாலகம் திட்டம் !
ஊரடங்கு காரணமாக பால் வீடு தேடி விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக ஆவின் பாலகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மே 3 தேதி வரை ஊரடங்கு உத்தவை பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில், தற்போது தமிழக அரசானது அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னை, கோவை, திருப்பூர் மற்றும் சேலம் மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளனர்.
இதனால், இன்று மாலை 3 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் மக்கள் அனைவரும் கடைகளின் முன் கூட்டம் கூட்டமாக நின்று மூன்று நாட்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில், மூன்று நாட்களுக்கு பால் தேவைக்கு என்ன செய்வது என்று மக்கள் மத்தியில் அச்சம் எழுந்தது.
இதற்கு ஆவின் பாலகம் பால் பொருட்களை வாடிக்கையாளர்கள் வீடு தேடி சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். ஏப்ரல் 24ம் தேதி முதல் ஜோமட்டோ, டன்ஜோ நிறுவனங்கள் மூலம் சேவையாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு சிறந்த முறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அறிவித்துள்ளனர்.