ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்து முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, அதற்கான புதிய விலைப் பட்டியல் வெளியீடு.
தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட உடனே, 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு அரசாணைகள் பிறப்பித்தார். அதில் முக்கியமான ஒன்றான பொதுமக்கள் நலன் கருதி, ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படுகிறது என்றும் இத்திட்டம் வருகின்ற மே 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த அரசாணைக்கு ஏற்ப பொதுமக்கள் ஆவின் பார்லர்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் நேரடியாக 16ம் தேதி முதல் ஆவின் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைத்து பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, அதற்கான புதிய விலைப் பட்டியல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சில்லறை விற்பனைபடி, சமன்படுத்தப்பட்ட பால் (1000மிலி TM) தற்போதைய விலை ரூ.43 லிருந்து ரூ.40 ஆகவும், சமன்படுத்தப்பட்ட பால் (500மிலி TM) ரூ.21.50 லிருந்து ரூ.20 ஆகவும், நிலப்படுத்தப்பட்ட பால் (500மிலி SM) ரூ.23.50 லிருந்து ரூ.22 ஆகவும், நிறை கொழுப்பு பால் (500மிலி FCM) ரூ.25.50 லிருந்து ரூ.24 ஆகவும், இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (500மிலி DTM) ரூ.20 லிருந்து ரூ.18.50 ஆகவும், டீமேட் (1000 மிலி) ரூ.60 லிருந்து ரூ.57 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
பால் அட்டை விற்பனைப்படி, சமன்படுத்தப்பட்ட பால் (1000மிலி TM) தற்போதைய விலை ரூ.40 லிருந்து ரூ.37 ஆகவும், சமன்படுத்தப்பட்ட பால் (500மிலி TM) ரூ.20 லிருந்து ரூ.18.50 ஆகவும், நிலப்படுத்தப்பட்ட பால் (500மிலி SM) ரூ.22.50 லிருந்து ரூ.21 ஆகவும், நிறை கொழுப்பு பால் (500மிலி FCM) ரூ.24.50 லிருந்து ரூ.23 ஆகவும், இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (500மிலி DTM) ரூ.19.50 லிருந்து ரூ.18 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…